புதிய பேருந்துகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்

pro col stu  1
pro col stu 1

இந்த வருடத்தின் இறுதிக்குள் இலங்கை போக்குவரத்து சபைக்கு 2500 புதிய பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது 6 ஆயிரம் பேருந்துகள் காணப்படுவதாகவும் அதில் 2 ஆயிரம் பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தக்கூடிய நிலையில் காணப்படுகின்றன.

இதனால் 36 முதல் 56 வரையிலான ஆசனங்களை கொண்ட 400 பேருந்துகளையும் 26 ஆசனங்களை கொண்ட 100 பேருந்துகளையும் கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.