பல்கலைக்கழக மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

625.500.560.350.160.300.053.800.900.160.90
625.500.560.350.160.300.053.800.900.160.90

மஹபொல புலமைப்பரிசில் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவு 7000 ரூபாயாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது மாணவர்களுக்கு 5000 ரூபாய் மாதாந்திர கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் இது பல்கலைக்கழக விடுதியில் தங்கும் அவர்களின் செலவுகளை ஈடுகட்ட போதுமானதாக இல்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், ஒவ்வொரு மாதமும் 15 ஆம் திகதிக்கு முன்னர் இந்த உதவித்தொகையை பல்கலைக்கழக மாணவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக அனுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.