யாழில் தேசிய சமுர்த்தி தைப்பொங்கல் விழா

IMG 8013
IMG 8013

சூரியபகவானுக்கு நன்றி செலுத்தும் முகமாக தைபொங்கல் விழா யாழ் மாவட்டத்தின் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் இன்று (17) அச்சுவேலி பகுதியில் சிறப்பாக முன்னேடுக்கப்பட்டது.

இந் நிகழ்வில் விருந்தனர்களாக அமைச்சர் தாரக பாலசூரிய , பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர்கள் , அரசாங்க அதிபர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அங்கஜன் இராமநாதன், ஐனாதிபதியால் தற்போது வழங்கப்பட இருக்கும் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் சமுர்த்தி பயானாளிகளுக்கும் சமுர்த்தி பெறுவதற்கு தகுதி உடையவர்களுக்கும் முதலுரிமை அடிப்படையில் வழங்கப்டவுள்ளதாகவும் தெரிவித்தார்.

காணமல்போனோரின் குடும்பங்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு புதிய சமுர்த்தி வேலைத்திட்டங்களை செயற்படுத்த விரைவாக நடவடிக்கை எடுப்பாதக அமைச்சர் தாரக பாலசூரிய உறுதியளித்தார்.

தொடர்ந்து பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், துவிச்சக்கரவண்டிகள் விருந்தினர்களால் வழங்கிவைக்கப்பட்டது.