முன்னாள் தலைவருக்கு 15 வருடங்கள் சிறை!

9 mkj 0
9 mkj 0

14 வயது சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவத்தில் அக்குரஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சாருவ லியனகே சுனிலுக்கு 15 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படடுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெதி இன்று இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அத்துடன், சந்தேக நபருக்கு 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நட்டஈடாக வழங்குமாறும் உத்தவிடப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் நாள் முதல் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் நாள் வரையான காலப்பகுதியில், அக்குரஸ்ஸ நகரிலுள்ள வாடி வீடொன்றில் 14 வயது சிறுமி ஒருவரை அக்குரஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சாருவ லியனகே சுனில் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டமை அறிந்ததே .