நெய் சிலையை நாய்கள் இழுத்த கதையாக தமிழ் வாக்குகள் – மோகன் கவலை

mohan
mohan

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கிழக்கில் உள்ள இஸ்லாமிய கட்சிகள் மௌனமாக இருந்து ஒருங்கிணைந்து போட்டியிடுவது பற்றி தீவிரமாக ஆலோசித்து வருவதாக தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கில் வட்டாரத்துக்கு ஒவ்வொரு தமிழ் கட்சிகள் புதிது புதிதாக முளைத்து வருகிறது. இந்நிலை தொடருமானால் தமிழர் வாக்குகள் ‘நெய் சிலையை நாய்கள் இழுத்த கதையாக’ வந்து முடியும்.

எனவே இப்போது இருக்கின்ற தமிழ் கட்சிகள் ஒன்றிணையா விட்டால் தமிழ் மக்களின் வெற்றி எட்டாக்கனியாகி விடும் என கவலை தெரிவித்துள்ளார்.

இதேவேளை மட்டக்களப்பில் செயற்பட்டு வருகின்ற தமிழ் அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் தமக்குள் சண்டையிட்டுக் கொள்வதாகவும் இதன் காரணமாக தமிழ் மக்கள் வாக்குகள் மேலும் சிதறடிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.