சம்பந்தனிற்கு வழங்கப்படுகின்ற சலுகைகள் மீள பெறப்படாது – அமைச்சரவை ஒப்புதல்

dines gunawardana 2
dines gunawardana 2

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனிற்கு
தற்போது வழங்கப்பட்டு வருகின்ற சலுகைகளை மாற்றமின்றி வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

இன்று (22) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது அவர் இதனை தெரிவித்தார்.

முக்கியமான அரசியல் தலைவர்களிற்கு இது போன்ற வசதிகளை அரசு செய்து வருகிறது. இரா.சம்பந்தனிற்கு மட்டுமல்ல, வீ.ஆனந்தசங்கரிக்கும் அரசு வீடொன்றை வழங்கியுள்ளது.

இரா.சம்பந்தினிற்கு வழங்கப்பட்ட எந்த சலுகையும் மீளப்பெறப்பட மாட்டாது. சம்பந்தனிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் அறிவுறுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.