கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு தேசிய தூய்மை உற்பத்தி விருது

DSC0282
DSC0282

சுகாதார சேவையில் சிறந்த சேவையை மேற்கொண்டதன் மூலம் கல்முனை அஷ்ரப் ஞபாகர்த்த வைத்தியசாலைக்கு “தேசிய தூய்மை உற்பத்தி விருது” வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வானது (21) கொழும்பில் வோட்டர் எட்ச் விடுதியில் (WATERS EDGE Hotel) இடம்பெற்றது.

சுகாதார சேவை வளங்கள் நிறுவனங்களினாலும் மற்றும் ஏனைய தொழில் சார் நிறுவனங்களாலும் விண்ணப்பிக்கப்பட்ட பலரது விண்ணப்பங்களுக்கு மத்தியில், சுகாதார சேவை வளங்கள் பிரிவில் கல்முனை அஷ்ரப் ஞபாகர்த்த வைத்தியசாலை அதிக மதிப்பெண் பெற்று தெரிவு செய்யப்பட்டிருந்தது .

2019 க்கான விருது வழங்கும் விருது விழாவில் வெண்கல விருது மற்றும் சான்றிதழ் என்பன வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதனை வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் கலாநிதி ஏ.எல்.எப்.றஹ்மான் பெற்றுக்கொண்டார்.

இது தொடர்பாக வைத்திய அத்தியட்சகரை கெளரவிக்கும் வைபவம் வைத்தியசாலை நிருவாகத்தினரால் (22) ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது

இவ் விருது இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

எப்போதும் எமது வைத்தியசாலை மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க காத்திருக்கிறது. இவ் விருதானது இப் பிராந்தியத்துக்கும் வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கும்
இது பெறுமதி சேர்த்துள்ளது. உங்கள் அனைவரின் அயராத முயற்சியினால் எமது வைத்தியசாலைக்கு இப்படியான விடயதானங்கள் இடம்பெறுகின்றது.

இந்த விருதினை பெற்றுக்கொள்ளவும் எமது சேவையினை தரமாக வழங்கவும் உறுதியாக செயற்படும் எமது அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் தனது நன்றியினையும் பாராட்டுதல்களையும் தெரிவிக்கிறோம்.

அத்துடன் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் வைத்திய அத்தியட்சருக்கு நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்தனர்.

இதேவேளை மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு வழிகாட்டலில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் கடந்த வருடம் (2019) ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி சுற்று சூழலியல் விருது-2019”வழங்கும் நிகழ்வில் கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலைக்கு தேசிய மட்டத்தில் வெள்ளி விருது (Silver Award) கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.