ஐ.தே.கவின் மாற்று அணி தேசப்பற்று ஐக்கிய தேசியக் கட்சி?

colombo
colombo

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எழுந்திருக்கும் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாத நிலையில் ஐ.தே.கவின் மாற்று அணியாக “தேசப்பற்று ஐக்கிய தேசியக் கட்சி” எனும் சுவரொட்டிகளை கொழும்பின் பல இடங்களிலும் காணக்கூடியதாக உள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் மாற்று அணியென தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் ஒரு பிரிவினர் பச்சை நிறத்திலான எழுத்தில் எழுதப்பட்ட சுவரொட்டிகளை கொழும்பில் ஒட்டியுள்ளனர். அதில் ஆங்கிலம் சிங்களம் ஆகிய மொழிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.