ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவுக்கு உத்தரவு பிறப்பிக்க அதிகாரமில்லை – டி லிவேரா

di livera
di livera

சட்ட மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்க, சட்ட ரீதியிலான எந்த அதிகாரமும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவுக்கு இல்லை என சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலமாக நேற்று (28) அவர் இதனை அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவொன்றுக்கு நீதிமன்றம் ஒன்றின் முன்னிலையில் விசாரிக்கப்படும் வழக்கொன்று தொடர்பில் உத்தரவிடும் அதிகாரம் அல்லது அதனை இடை நிறுத்தும் அதிகாரம், உரிமை சட்ட ரீதியாக ஆணைக் குழுவுக்கு இல்லை என அந்த கடிதத்தில் சட்ட மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

ஆணைக்குழு விசாரணைகள் நிறைவடையும் வரை அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் டி.கே.பி. தசநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைகளை ஒத்திவைக்குமாறு விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அந்த ஆணைக்குழு சட்டமா அதிபருக்கு நேற்று முன்தினம் (27) இது தொடர்பான அறிவித்தலை முன்வைத்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.