வாழைச்சேனை வைத்தியாசாலையினை பார்வையிட்ட கிழக்கு மாகாண ஆளுநர்

anuradha
anuradha

மட்டக்களப்பு – வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா ஜகம்பத் நேற்று (28) சென்று பார்வையிட்டுள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் இரங்க ராஜபக்ஷ தலைமையில் விசேட ஒன்றுகூடலொன்று வைத்தியசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வைத்தியசாலையில் நிலவும் உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை, மழை நீர் வடிந்தோடுவதற்கான வடிகாலமைப்பு திட்டம், கழிவு நீர் அகற்றும் திட்டங்கள் என்பவற்றை அவசரமாக நிறைவேற்றி தருமாறு வைத்திய அத்தியட்சகர் இரங்க ராஜபக்ஷவினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.