பலவருடம் மூளையில் நாடாப் புழுவுடன் வாழ்ந்த நபர்!

headaches tape worm nrw
headaches tape worm nrw

கடும் தலை­வலி மற்றும் வாந்­தியால் பாதிக்­கப்­பட்ட நிலையில் பல வருட கால­மாக துன்­பப்­­பட்டு வந்த நபரொருவரை தீவிர மருத்­துவ பரி­சோ­த­னைக்­குட்ப­டுத்­திய மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குறித்த நபரின் தலையில் நாடாப் புழு ஒன்று இருந்துள்ளது. குறித்த சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது.

டெக்ஸாஸ் மாநி­லத்தில் அஸ்டின் நகரில் வசிக்கும் கெரார்டோ என அழைக்­கப்­படும் குறித்த நபர் பல வருட காலத்­திற்கு முன்னர் மெக்­ஸி­க­கோவில் வசித்து வந்துள்ளார்.

அங்கே முறை­யாக சமைக்­காத பன்றி இறைச்சியை உண்டதையடுத்து அவ­ருக்கு நாடாப் புழு தொற்று ஏற்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இத­னை­ய­டுத்து அவ­ருக்கு அறுவைச் சிகிச்சை மேற்­கொண்டு அவ­ரது மூளை­யி­லி­ருந்த நாடாப் புழு அகற்­றப்­பட்­டது.

அவர் சிகிச்சை பெறு­வ­தற்கு இன்னும் தாம­த­மா­கி­யி­ருக்கும் பட்­சத்தில் அந்த நாடாப் புழுவும் அதி­லி­ருந்து இன­வி­ருத்­தி­ய­டைந்த புழுக்களும் அவரது உயிருக்கு ஆபத்தை விளைவித்திருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.