ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக சஜித் நியமனம்

Sajith 3
Sajith 3

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று (30) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் வேட்பாளராகவும் சஜித் பிரேமதாச செயற்படுவதற்கு செயற்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவராக தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்க செயற்படுவதற்கு கட்சியின் செயற்குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.