யாழில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம்

IMG 9279
IMG 9279

நாடுமுழுவதும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக அமைக்கப்படவுள்ள “கிராமத்துக்கு ஒர் வீடு – நாட்டுக்கு ஓர் எதிர்காலம்” என்ற வீடமைப்பு திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று(02) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் யாழ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.நிக்கொலஸ்பிள்ளை, வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் மு.ரவீந்திரன், பிரதேச செயலகர்கள், கிராமஉத்தியோகத்தர்கள், பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.