367 பில்லியன் பெற்றுக்கொடுக்க குறைநிரப்பு பிரேரணை

9 mk
9 mk

கடந்த அரசாங்கம் அபிவிருத்தி எனும் பெயரில் ஒப்பந்தக்காரர்கள், விநியோகத்தர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளுக்கு கொடுக்க வேண்டிய 367 பில்லியன் ரூபா நிதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந் நிதியை பெறுவதற்காக நாடாளுமன்றத்தில் குறைநிரப்பு பிரேரணையொன்றை முன்வைப்பதற்கென நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

நாடாளுமன்றம் இப் பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்கியதை தொடர்ந்து சிறிய மற்றும் நடுத்தர ஒப்பந்தக்காரர்கள், விநியோகத்தர்கள் மற்றும் அமைப்புகளுக்குரிய பணம் மீளச்செலுத்தப்படுமென அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.