ஒரு லட்சம் தொழில் வாய்ப்பு,நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் இறுதி கட்டம் நிறைவு!

IMG20200227085511 01
IMG20200227085511 01

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிக்கமைவாக 1 லட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் பலநோக்கு அபிவிருத்தி செயலணி வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு நிறைவடைந்துள்ளது.

அதற்கமைவாக நாவிதன்வெளி  பிரதேச செயலகத்திற்குட்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்குவதற்கான நேர்முகப்பரீட்சைகள் பிரதேச செயலகத்தில் 4வது நாளாகவும் இடம்பெற்று நிறைவடைந்துள்ளது.

நாவிதன்வெளி  பிரதேச செயலகப் பிரிவில் தொழில் வாய்ப்புக்காக 1579 இளைஞர், யுவதிகள் விண்ணப்பித்துள்ளனர்.

நாவிதன்வெளி  பிரதேச செயலாளர்  எஸ.ரங்கநாதன்  வழிகாட்டலில் நிர்வாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன்  மற்றும்,கிராம  உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இராணுவ மேஜர், கெப்டன் தரத்திலான உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் நேர்முகப் பரீட்சைகள் சிறப்பாக நடைபெற்றது.

இவ் நேர்முக பரீட்சைகள் கடந்த (26) புதன்கிழமை முதல் நேற்று சனிக்கிழமை (29) வரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.