இலங்கை இராணுவ மயமாகும் அச்சம்! நாடாளுமன்றில் ஒரு கதை ஜெனீவாவில் ஒரு கதை

625.500.560.350.160.300.053.800.900.160.90 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 1

நாடு இராணுவ மாயமாகும் என்ற அச்சம் தோன்றுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பார்க்கும்போது நாடு இராணுவ மாயமாகும் என்ற அச்சம் தோன்றுகின்றது எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க, நூறு நாட்களில் இந்த நிலை என்றால் தேர்தலுக்கு பின்னர் நாட்டின் ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிடும் என்றும் கூறினார்.

குறிப்பாக ஜெனிவா மனித உரிமை பேரவையில், இலங்கைக்கு எதிரான பிரேரணையில் இருந்து விலகுவதாக நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவிக்கையில், இது சிங்கள நாடு. எமக்கு எதிராக யாருக்கும் நடவடிக்கை எடுக்கமுடியாது போன்ற வீர வசனங்களால் கதைத்தார்.

ஆனால் ஜெனிவாவில் இலங்கை பல் இன, பல்தேசிய நாடு, அனைத்து இன மக்களும் சமமாக மதிக்கப்படுவதாகவும் அனைவருக்கும் பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றார். இது இவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் ஒன்றையும் சர்வதேசத்துக்கு வேறு ஒன்றையும் தெரிவிக்கும் நிலையே எடுத்துக்காட்டுவதாகவும் கூறினார்.