வடக்கு மாகாணசபைக்கு 14 தங்கவிருதுகள்

இலங்கையின் 844 அலுவலகங்களில் 110 நிறுவனங்களிற்கு வழங்கப்பட்ட தங்க விருதுகளில் வடக்கு மாகாண சபை 14 தங்க விருதுகளை தன்வசப்படுத்தியுள்ளது.

வடக்குமாகாண சபையின் திதிச் செயலாற்றுகையின் தொடர்ச்சியான முன்னேற்றத்தின் பால் பாராளுமன்ற பொதுக்கணக்குகள் குழுவினால் 2015முதல் அறிமுகப்படுத்தப்பட்ட இணைய மயப்படுத்தப்பட்ட நிதிச் செயலாற்றுகையில் மதிப்பீட்டின் கீழ் அமைச்சுக்கள் , திணைக்களங்கள் , மாகாண சபைகள் , மாவட்டச் செயலகங்கள் அதிகார சபைகள் , உள்ளூலாட்சி மன்றங்கள் அடங்களாக 844 நிறுவனங்களினது நிதிச் செயலாற்றுகை மதிப்பீடு செய்யப்பட்டது.

அதன் பிரகாரம் 2018ஆம். ஆண்டு அதிஉயர் செயலாற்றுகையை வெளிப்படுத்திய 110 நிறுவனங்களிற்கு தங்க வெள்ளி விருதுகளும் 114 நிறுவனங்களிற்கு சான்றிதழ்களும் பெப்ரவரி 28 அன்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் முன்னிலையில் இடம்பெற்றது.

இதில் சபாநாயகர் , அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்காய்வாளர் நாயகம் , நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு உறுப்பினர்கள் ஆகியோருடன் திறைசேரி செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந் நிகழ்வில் வடக்கு மாகாண சபையினைச் சேர்ந்த 32 அலுவலகங்களில் 14 அலுவலகங்களிற்கு விருதுகளும் 17 அலுவலகங்களிற்கு சான்றிதழுமாக 31 திணைக்களங்கள் / அலுவலகங்கள் அதி உயர் பெறுபேற்றினை பெற்றனர்.

இதன் பிரகாரம் வடக்கு மாகாண சபையின் நிறுவனங்களின் பெறுபேற்றின் அடிப்படையில் நிதிச் செயலாற்றுகை பெறுப்பேற்றின் அடிப்படையாக கொண்டு வடக்கு மாகாண சபைக்கு பிரத்தியோக முதன்மை விருதும் வழங்கப்பட்டது. –