யாழ் மாநகர முதல்வருக்கும் – பிரான்ஸ் நாட்டின் தூதுவருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

20200302 100546 mfnr
20200302 100546 mfnr

யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களுக்கும் இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டின் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இன்று (02.03.2020) மாநகர முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் மாநகரகசபையின் செயற்பாடுகள், நகரில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் உயர்ஸ்தானிகர் வினவினார். அதற்கு மாநரசபையின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் தொடர்பிலும், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்டங்கள் தொடர்பிலும், மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்டு வரும் மாநகரசபை கட்டட பணிகள் தொடர்பிலும் ஏனைய நகர அபிவிருத்திகள் தொடர்பிலும் விளக்கமளித்தார்