மக்கள் விரும்பிய புரட்சியே இடம் பெற்றுள்ளது!!

6 es
6 es

ஐக்கிய தேசிய கட்சியினுள் இடம் பெற்றிருக்கும் புரட்சிக்கு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடைய நூறு சதவீதப்பங்களிப்பு கிடைத்துள்ளது. கட்சியை பிளவு படுத்துவது எமது நோக்கமல்ல . ஏனெனில் நாம் அனைவரும் ஐக்கியதேசிய கட்சியை சேர்ந்தவர்களே.

ஜனாதிபதி கோத்தாபயராஜபக்ஷவின் ஆட்சி வரும் போது மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்புக்கள் காணப்பட்டது.

அதற்கு மாறுபட்ட கோணத்திலேயே இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. கோத்தாபய அரசாங்கம் பூச்சிய நிலையை அடைந்துள்ளது.

ஏனெனில் பொருட்களின் விலை அதிகரிப்பை தாக்குப்பிடிக்க முடியாத நிலைக்கு நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அக்கறையுடையவர்களானால் வேலையில்லா பட்டதாரிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னராக நியமனங்களை வழங்கியிருக்க வேண்டும்.

அதற்கு மாறாக அவர்ளை ஏமாற்றும் நடவடிக்கைகளே இடம் பெற்றுள்ளன. ஒரு இலட்சம் வேலைவாய்ப்பை வழங்குவதாக கூறி மாணவர்களை ஏமாற்றும் நடவடிக்கைகளும் இடம் பெற்று வருகின்றன என அவர் இதன்போது தெரிவித்தார்.