மாணவர் சமூகத்துக்கு டக்ளஸ் அழைப்பு!

1 Va
1 Va

பிரதேச நன்மையை கருத்தில் கொண்டு மாணவர் சமூகத்தினரும் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் சமூகத்திற்கு முன்மாதியாக விளக்க வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் வவுனியா வளாகத்தில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை பாதிக்கும் குறைபாடுகளை நீக்குவதற்கும் தன்னாலான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதற்கும் உறுதியளித்தார்.

வவுனியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் வவுனியா வளாகத்தினை சேர்ந்த அதிகாரிகள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போதே மேற்குறிப்பிட்ட கருத்துக்களை வெளியிட்ட அமைச்சர், மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்வின்றி தொடருவதற்கு தவறானவர்களின் கைகளில் அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டமையே காரணம் எனவும் தெரிவித்தார்.