தமிழ்க் கூட்டமைப்பு சரியாக செயற்படவில்லை!

8dd
8dd

“தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சி 100 வீதம் சரியாக செயற்பட்டது என்று நான் கூறவில்லை.

ஆனால், மக்களுக்கு உண்மையாக இருக்கின்றது. தமிழ் இனத்தின் அடையாளத்துக்காக கொள்கை ரீதியாக தனித்துவமாகப் பயணிக்கின்றோம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“தமிழர்களின் இருப்புக்கு இன்று அரசமைப்பு மாற்றம் அவசியம். அதன்மூலம் தமிழர்கள் முன் உள்ள பிரச்சினைகளுக்கு 80 சதவீதமான தீர்வு கிடைக்கும்.

வடக்கு, கிழக்கு மாகாணம் தமிழர்கள் செறிந்து வாழ்ந்த பிரதேசமாகவும் அதிக செறிவாகவும் இருந்தது.

ஆனால், இன்று தமிழர்களது இன விகிதாசாரத்தைக் குறைக்கும் அளவுக்கு சிங்களக் குடியேற்றங்கள் வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


மக்கள் நலன்சார்ந்த முடிவுகளை நாங்கள் சிந்தித்து கட்சியாக எடுத்திருக்கின்றோம். விலைபேச முடியாத சக்தியாக இருக்கின்றோம்.

கூட்டமைப்பில் உள்ள பலரிடம் கருத்துக்கள் பல இருக்கலாம். அது அவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள்” – என்றார்.