பாடசாலை விடுமுறையை வரவேற்ற ரணில்

7 fgh
7 fgh

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் அரச மற்றும் தனியார் சுகாதார பிரிவுகளுடன் கலந்துரையாடி அரசாங்கம் ஒரு முறையான வேலைத் திட்டத்தை தயாரிக்க வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கியமை அரசாங்கத்தின் சிறந்த நடவடிக்கை என்பதை சுட்டிக்காட்டியுள்ள ரணில் விக்கிரமசிங்க, கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு உடனடியாக தெளிவுபடுத்த வேண்டுமெனவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.