ஈரோஸ் அமைப்பு மலையகத்திலுள்ள மாவட்டங்களில் போட்டியிடாது!

9
9

ஈரோஸ் அமைப்பு கடந்த 40 வருடங்களாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் நலன்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. விரைவில் தேர்தலொன்று நடைபெறவுள்ள நிலையில் மக்கள் பக்கம் நின்று முடிவெடுக்க வேண்டிய தேவைப்பாடு எமக்கு இருக்கின்றது.

ஆனால் பொதுத்தேர்தலில் ஈரோஸ் அமைப்பு மலையகத்திலுள்ள மாவட்டங்களில் போட்டியிடாதென அவ்வமைப்பின் மலையக பிராந்திய இணைப்பாளர் ஜீவன் ராஜேந்திரன் தெரிவித்தார்.

இதன்படி பொதுத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் களநிலவரத்தை ஆராய்ந்து, முடிவெடுக்கும் அதிகாரத்தை ஈரோஸ் அமைப்பின் மத்திய குழு மலையக பிராந்தியக் குழுவுக்கு வழங்கியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் .