கொரோனா வைரஸ் தொடர்பில் மக்களை விழிப்பாக இருக்குமாறு விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை

images 3 2
images 3 2

தற்பொழுது உலகத்தையே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் தமிழ் மக்கள் அவதானமாக இருக்கவேண்டுமென முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கொரொனா வைரஸானது வடக்குப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்துமேயாயின் வடக்கில் பாரிய உயிரிழப்புக்களை சந்திக்க நேரிடும் ஏற்கனவே நாம் யுத்தத்தாலும் பல்வேறு இடர்களாலும் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் மீண்டும் அவ்வாறு அழிவிவை நாம் எதிர்நோக்க அதற்கு இடமளிக்க முடியாது தமிழ் மக்கள் அனைவரும் கொரோனா தொற்று தொடர்பில் அரசினால் வெளியிடப்பட்டு வரும் அறிவுறுத்தலுக்கு அமைய அதனைப் பின்பற்றி நடந்து கொள்ளுமாறும் பொது வெளியில் ஒன்று கூடுவதை தவிர்த்து தேவையற்ற நடமாட்டங்களை குறைத்து வீடுகளில் இருந்து தத்தமது கடமைகளை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது தேர்தல் காலம் என்பதால் பொதுமக்கள் பொதுவெளியில் ஒன்று கூடுவதை தவிர்க்க முன்வரவேண்டும் எனவும் யுத்தத்தினால் நாம் பல உயிர்களை இழந்து உள்ளோம் பல சொத்துக்களை இழந்து உள்ளோம் அதேபோல்தான் வைரஸானது ஒரு அழிவை ஏற்படுத்தும் நோயாக உலக நாடுகளில் பரவி வருகின்றது எனினும் நமது தமிழ் பிரதேசங்களில் இன்று வரை எவருக்கும் கொரோனா ஏற்படவில்லை என்று இருக்காது குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் இடமிருந்து நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அத்தோடு சுகாதார திணைக்களத்தினால் குறிப்பிடப்படும் விடயங்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.