கே.வி. தவராசாவுக்கு இடம் வழங்காது அம்பிகாவை முதன்மைப்படுத்திய சுமந்திரன் !

8 n
8 n

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசாவுக்கு நேற்றுமுன்தினம் தேசியப்பட்டியலில் முதலிடம் என தமிழரசுக்கட்சியால் தெரிவித்திருந்த நிலையில் நேற்றைய தினம் எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களிடம் அம்பிகாவுக்கே முதலிடம் என தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத சட்டத்துக்கு எதிராக பல வழக்குகளில் வாதிட்டு பல தமிழ் இளைஞர்களை விடுவித்தும், கொழும்பு தமிழரசுக்கட்சியின் தலைவராகவும் செயற்ப்பட்டுவரும் கே.வி.தவராசா நாடாளுமன்றம் வருவதை சுமந்திரன் விரும்பவில்லை என்பதாலே அம்பிகாவினை முன்னிறுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக தென்னிலங்கையுடன் சிநேகித உறவு, சட்டத்துறை சார் அறிவு, மும்மொழி பேச்சு திறன், பூளோக அரசியல் பற்றிய தெளிவுடைய தவராசா நாடாளுமன்றம் வந்தால் சுமந்திரன் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதில் சிக்கல் நிலை உருவாகும் என்பதால் அம்பிகாவினை முன்னிறுத்தியமை தவராசாவின் தேசியப்பட்டியலை கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றது.

இம்முறை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தேசியப்பட்டியலில் இரு ஆசனங்கள் வருவதற்கு சந்தர்பம் இல்லை என்ற நிலையிலே இவ்வாற காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றது.

இவ்விடயத்தில் இந்தியாவும், மேற்குலமும் மறைமுகமாக மோதிக்கொள்ளுகின்றன. சுமந்திரனின் மேற்குலக சாயலை கட்டுப்படுத்தவே தவராசாவை இந்தியா களத்தில் இறக்குகின்றது, அதேநேரம் சுமந்திரன் தொடர்ந்தும் கூட்டமைப்பில் தனியே இருந்துகொண்டு முடிவுகளை எடுப்பதை பலர் எதிர்க்கின்றார்கள், அதனை கட்டுப்படுத்த மேற்குல சாயலுடன் சுமந்திரனுடன் இணைந்து செல்லக்கூடியவர்களை இம்முறை தேர்தலில் இறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு தோல்வியடைந்த நிலையில் அம்பிகா விடயத்தில் மேற்குலகம் உறுதியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பிகா தமிழருடைய தேசியம் என்பதை புரியாதவர், தமிழ் கலாச்சாரத்தினை பிரதிபலிக்காதவர், உரிமை பிரச்சனைகளை எப்போதும் பேசாதவர் என்பதாலே மனித உரிமைகள் ஆணையாளர் பதவி வழங்கப்பட்டது.

அம்பிகா டிவிட்டரில் இனி அரசியல் பயணம் இல்லை. பொதுச்சேவையில் ஈடுபடுவேன் என தொரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது .