மக்களே வதந்திகளை நம்ப வேண்டாம்- பந்துல குணவர்தன தெரிவிப்பு!

download 5
download 5

அத்தியாவசியம் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களின் இறக்குமதிகளும் தடை செய்யப்பட்டுள்ளதாக வெளியானதாக தகவல் உண்மைக்கு புறம்பானது என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

இன்று (9) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேசம் பாரியதொரு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளுக்கும் எல்லா நாடுகளிலும் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே அத்தியாசிய பொருட்கள் அற்ற ஏனைய பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் வாகனங்கள் மற்றும் பிளாஸ்டிக் ஆகிய பொருட்களும் அடங்குகின்றன.

எவ்வாறாயினும் அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள், உரம், இரசாயண திரவங்கள் உள்ளிட்டவைகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே அத்தியாவசிய பொருட்கள் தவிர்ந்து ஏனைய அனைத்து பொருட்களினதும் இறக்குமதிக்கு தடைவிதிப்பதாக தெரிவிப்பது உண்மைக்கு புறம்பானது என அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.