பொலிஸ் ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் தொடர்பில் விசேட செயற்திட்டம்

240583e24f09d68364b2f65c25ae58fe XL
240583e24f09d68364b2f65c25ae58fe XL

பொலிஸ் ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் தொடர்பில் விசேட செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன வெளியிட்டுள்ள தகவல்களின்படி,

அத்தியாவசிய சேவைகளை முறையாக முன்னெடுத்து செல்லும் நோக்கில் தற்போது வாகனங்களுக்கான ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரங்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் அனுமதியுடன் வழங்கப்பட்டு வருகின்றன.

எனினும் ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரத்தை முறைகேடாக பயன்படுத்துவது தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகளை ஆராய்ந்து அனுமதி பத்திரங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதுவொருபுறமிருக்க, கடந்த மாதம் 20 ஆம் திகதி மாலை 6 மணி முதல் நேற்று மாலை 6 மணி வரையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 11 ஆயிரத்து 607 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் இரண்டாயிரத்து 878 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று, நேற்று மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரையிலான 6 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 588 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.