பணிப்புறக்கணிப்புக்களை ஆராய்வதற்கு அமைச்சரவை உபகுழு

meeting
meeting

அரசாங்க துறைகளில் சிலவற்றில் ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பணிப்புறக்கணிப்புகள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த உப குழுவில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பொது நிருவாக அமைச்சர் வஜிர அபேவர்தன, காதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன, இராஜாங்க அமைச்சர் அசோ அபேவர்த்தன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் அண்மைக்காலமாக அரச துறைகளில் பணிப்புறக்கணிப்புக்கள் அதிகரித்து வருகுின்றமை குறிப்பிடத்தக்கது.