அனைத்து கொடுப்பனவுகளையும் இன்றைய தினம் வழங்கி நிறைவு செய்வதற்கு தீர்மானம்!

21483
21483

கொரோனா தொற்று பரவல் காரணமாக முதியோர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவை இன்றைய தினம் வழங்கி நிறைவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்போது இந்த கொடுப்பனவு கிடைக்கப்பெறும் விசேட தேவையுடையோர் மற்றும் காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்கள் என அனைவருக்கும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்திற்கான முதியோருக்கான கொடுப்பனவாக தற்போது 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ள 70 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் மேலும் 3 ஆயிரம் ரூபா இன்றைய தினம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், சமுர்த்தி கொடுப்பனவு உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகளை வழங்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை, அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை அஞ்சல் அலுவலகம் முன்னெடுத்துள்ளது.

இந்த சேவைக்கு பல்பொருள் அங்காடிகளின் உரிமையாளர்களையும் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அறிந்துக்கொள்வதற்கு 071 80 98 700 அல்லது 071 44 31 624 மற்றும் 071 81 94 214 ஆகிய தொலைப்பேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.