4 வைத்தியர்கள் உட்பட 15 கொரோனாத் தொற்றாளர்கள் தனிமைப்படுத்தல்!!

download 14
download 14

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காகத் தகவல்களை மறைத்து சேர்க்கப்பட்டிருந்த ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொழும்பு, ஒருகொடவத்தைப் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் ஒருவர், சந்தேகத்தின் பேரில் அங்கிருந்து ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் கொரோனா தொற்றாளராக அடையாளம் இனங்காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் 4 வைத்தியர்கள் உட்பட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் வசந்த திஸாநாயக்க தெரிவித்தார்.