ஊரடங்கு சட்டத்தின் போது பணியில் ஈடுபடுபவர்களுக்கு முக்கிய கோரிக்கை!

download 1 11
download 1 11

நாட்டில் அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் ஊரடங்கு சட்டத்தின் போது அதற்கான அனுமதிபத்திரமாக பயன்படுத்தும் தொழில் அடையாள அட்டை மாத்திரமின்றி தாம் பணிபுரியும் நிறுவன பிரதானியினால் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணத்தையும் வைத்திருத்தல் அவசியமாகும் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

குறித்த நிபந்தனை நாளை (10) வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்பதோடு, வைத்தியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு இந் நிபந்தனை பொறுந்தாது என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

தமது தொழில் அடையாள அட்டைகளை சில நபர்கள் தவறாகப் பயன்படுத்துகின்றமை இனங்காணப்பட்டுள்ளமையால் இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவைகளுக்காக கிடைக்கப் பெற்றுள்ள ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம் இம் மாதம் 30 ஆம் திகதி வரை மாத்திரமே செல்லுபடியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதன் பின்னர் குறித்த அனுமதிபத்திரத்தை மீள புதுப்பிக்க வேண்டியது அவசியமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.