புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும்: பொலிஸ்மா அதிபர்

22 ad
22 ad

கிராமப்புறங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறு அளவிலான புத்தாண்டு கொண்டாட்டங்களையும் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து காவல்துறை நிலையங்களுக்கும் பதில் காவல்துறை பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

சில பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில், நடமாடும் மற்றும் உந்துருளி கண்காணிப்பு பணிகளை அதிகளவில் மேற்கொண்டு, பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் நலன்கருதியே இந்த ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களிடம் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்