இலங்கையில் உயிரிழப்புகளை தடுத்த ‘கொரோனா’ வைரஸ்!

vikatan 2020 03 88607812 8ba5 42ae ad08 7d6106f35a35 corona virus 1
vikatan 2020 03 88607812 8ba5 42ae ad08 7d6106f35a35 corona virus 1

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஊழித்தாண்டவமாடிவரும் நிலையில் அதன் கோரப்பிடிக்குள் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 20 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இலங்கையிலும் இதுவரை எழுவர் உயிரிழந்துள்ளனர். எனினும், ஏனைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் நாளொன்றுக்கு இடம்பெறும் உயிரிழப்பு விகிதம் கொரோனாவால் 99 சதவீதம் குறைந்துவிட்டது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு சராசரியாக 23 வாகன விபத்துகள் இலங்கையில் இடம்பெறுகின்றன என்றும், அவற்றால் குறைந்தபட்சம் ஏழு பேர் உயிரிழக்கின்றனர் என்றும், பலர் காயமடைகின்றனர் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தி, மக்களை பாதுகாக்கும் நோக்கில் கடந்த 20 ஆம் திகதி முதல் இலங்கையில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளைத் தவிர ஏனைய விடயங்களுக்கு போக்குவரத்தை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வாகன விபத்துகளில் உயிரிழப்பவர்கள், காயமடைபவர்களின் எண்ணிக்கை முழுமையாகக் குறைந்துவிட்டது என்றும், ஓரிரு சம்பவங்கள் மட்டுமே இதுவரை பதிவாகியுள்ளன என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

புத்தாண்டு காலப்பகுதியில் அதிக விபத்துகளும், உயிரிழப்புகளும் பதிவாகும். ஆனால், இம்முறை அந்நிலைமை இல்லாது போனமை மகிழ்ச்சிக்குரியது என்று தெரிவிக்கப்படுகின்றது.