ஊரடங்கு உத்தரவை மீறிய 1,522 பேர் கைது!

download 1 17
download 1 17

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலத்தில் அத்தியாவசிய சேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரங்களை வேறு தேவைகளுக்காக பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக எதிர்வரும் நாட்களிலும் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய தேவைகள் என்ற போர்வையில் பல்வேறு மோசடி வேளைகள் இடம்பெற்று வருவது தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தவை மீறிய மேலும் 1,522 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 306 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதன்படி இதுவரையில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 28,159 நபர்கள் கைதாகி்யுள்ளதோடு, 7,105 வாகனங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.