வெளிநாடுகளில் உள்ளவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதில் சிரமம்!

download 4 4 1
download 4 4 1

கொரோனா வைரஸால் சர்வதேச நாடுகளுக்கிடையிலான போக்குவரத்தை நிறுத்திய நிலையில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள 5000 இலங்கையர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும் அந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலமாக அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதில் முதற்கட்டமாக 900 இலங்கையர்களை அழைத்து வர விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சரவை இணைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

மத்திய கிழக்கில் தொழில் புரியும் வெளிநாட்டவர்கள் இலங்கை வர விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.