மூடப்பட்டது கிராட்ண்பாஸ் பகுதி; தேடுதல் வேட்டை ஆரம்பம்!

.jpg
.jpg

கொழும்பு 13, கிராட்ண்பாஸின் நாகலகம் வீதி அதி அபாயகர பகுதியாக அறிவிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

குறித்த வீதியில் வசிக்கும் போதைப்பொருள் பாவனையாளர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து அப்பகுதி முடக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுடன் மேலும் பலர் அங்கு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதால் தேடுதல் நடவடிக்கைளை மேற்கொள்ள வசதியாக இப் பகுதி முடக்கப்பட்டுள்ளது.