இலங்கை பெரும் பாதிப்பை சந்திக்கப் போகிறது-கரு ஜயசூரிய!!

.jpg
.jpg

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இவ்வருடம் ஏற்படவிருக்கும் உலகப் பொருளாதார நெருக்கடி இலங்கைக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.

அதனை எதிர்கொள்வதற்கு விவேகமான பொருளாதாரக் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும் என்றும் அவர் கோரியுள்ளார்.

மேலும் சர்வதேச நாணய நிதியம் (2020) ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் 3 சதவீதத்தினால் சுருங்கும் வாய்ப்பிருப்பதாக எதிர்வுகூறியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

உண்மையில் 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைக் காட்டிலும் பல மடங்கு பாதிப்பை தரக்கூடும்.

இலங்கையைப் பொறுத்தவரை இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

இலங்கையின் கடன்நிலை உயர்மட்ட இறக்குமதிகள் உள்ளிட்ட பல விடயங்களிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

இதனை எதிர்கொள்வதற்கு விவேகமான பொருளாதாரக் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.