தேர்தல் பிரசார நடவடிக்கை – தேர்தல்கள் ஆணைக்குழு விதித்துள்ள தடை

ELection Dep
ELection Dep

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளை விளம்பரப்படுத்தும் டிஜிட்டல் விளம்பரப் பதாகைகள் தடை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான பதாகைகளை காட்சிப்படுத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வீதியின் இரு மருங்கிலும் டிஜிட்டல் பதாகைகள் சிலர் காட்சிப்படுத்தவுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் கட்சி தொடர்பில் திரையரங்குகளில் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகத் தேர்தல் சட்டத்தின் கீழ் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டு கூறியுள்ளது.