பெருந்தோட்டத் தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்!

7 88ad
7 88ad

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் ஏதேனும் ஒரு வழியில் உதவி வழங்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், தற்போதைய சூழலில் தேர்தலை இன்னும் 3 மாதங்களுக்காவது பிற்போட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹற்றனில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், “பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என கொரோனா வைரஸ் பரவத்தொடங்க முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், கொரோனா தாக்கத்தால் அதனை வழங்க முடியாமல் இருப்பதாக தற்போது அறிவிக்கப்படுகின்றது.

தோட்டத் தொழிலாளர்கள் இன்று பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தோட்ட நிர்வாகங்களால் 3 அல்லது 4 நாட்களே வேலை வழங்கப்படுகின்றது. இதனால் குறைந்தளவு சம்பளமே கிடைக்கின்றது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு, அரசாங்கம் ஏதேனும் விதத்தில் மானிய அடிப்படையிலாவது உதவி வழங்கவேண்டும்.