கோத்தபாய தொடர்பான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு!

gota
gota

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் பொதுஜனமுன்னணி ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தபாய ராஜபக்சவின் குடியுரிமையைச் சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு மீதான வழக்கு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் விசாரணைக்கு வந்தபோதே மேலதிக சமர்பணங்களை நாளை 1.30 மணிக்கு எடுத்துக்கொள்ள நீதியரசர்கள் உத்தரவிட்டனர்.

இந்த விசாரணைகளின்போது கோத்தபாய ராஜபக்ஷவின் இரட்டை குடியுரிமை தொடர்பான எந்த ஆவணங்களும் குடிவரவு திணைக்களத்திடம் இல்லை என்று குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் சனத் ரத்நாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.