ஜனாதிபதி மாளிகை பல்கலைக்கழகமாக மாற்றப்படும்- சஜித் தெரிவிப்பு

president house
president house

ஜனாதிபதி மாளிகை தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்றப்படும் என ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் ஜனாதிபதியின் வீடு தேவையில்லை என்றும், இதுபோன்ற பொது இடங்களுக்கு பொது பணத்தை வீணடிக்கக்கூடாது என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும், ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் தனது மாதாந்த கொடுப்பனவை மக்களுக்கு வழங்குவதாக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ உறுதியளித்துள்ளார்.