சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட எருமை மாடுகள்

IMG 20200424 123511
IMG 20200424 123511

அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக  இரு வேறு சந்தர்ப்பங்களில் கொண்டு செல்லப்பட்ட  எருமை  மாடுகளை   சவளக்கடை பொலிசாஸார்  மீட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இருந்து நற்பிட்டிமுனை பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக வழித்தடை அனுமதிப்பத்திரமின்றி  கொண்டு சென்ற சுமார்  13 எருமை மாடுகள் வெள்ளிக்கிழமை(24)   அதிகாலை 5 மணியளவில் மீட்கப்பட்டது.

அதே நேரம் மற்றுமொரு   சந்தர்ப்பத்தில்  9 எருமை மாடுகள் சவளக்கடை பகுதியிலிருந்து சம்மாந்துறை பிரதேசத்திற்கு கொண்டு சென்ற  நிலையில்  மீட்கப்பட்டு  விசாரணைகளை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.இந்நடவடிக்கையானது சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில்  பொலிஸ் உத்தியோகத்தர்கள்
ரவூப்,ஜெயசுந்தர, திலேல்காந்த்,சுமனபால , பியந்த, ஆகியோர்  மேற்கொண்டனர்.

அத்துடன் எருமை மாடுகளை சட்டவிரோதமாக கொண்டு சென்ற இரு சந்தேக நபர்களையும்  இன்று கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.