மட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதார மற்றும் தீயணைப்புப் பிரிவினரால் கிருமியகற்றும் பணி

4b5
4b5

பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்காக நகரில் அணுகும் இடங்களில் மட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதார மற்றும் தீயணைப்புப் பிரிவினரால் கிருமியகற்றும் பணி இடம்பெற்றது.

பொதுமக்களின் சுகாதார நலன் கருதி மட்டக்களப்புப் பொலிசாரின் நீர் பீச்சியடிக்கும் வாகனத்தைப் பயன்படுத்தி சுமார் 20,000 லீற்றர் கிருமிநாசினி வியாபார நிலையங்கள், மத்திய மற்றும் தனியார் போக்குவரத்து நிலையங்கள், புகையிரத நிலையம் மற்றும் பிரதான வீதிகளில் விசிறி தொற்று நீக்கும் பணிகள் இடம்பெற்றன.

இதே வேளை புளியந்தீவு வெற்றிகள் விளையாட்டுக் கழக அங்கத்தினர்களால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வெளி வளாகம் மற்றும் மத்திய வீதி, லேக் வீதி உள்ளிட்ட பிரதேசங்களில் கிருமியகற்றும் பணியும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாநகர முதல்வர் தி.சரவணபவன், மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறி, சுகாதார நிவையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், மாநகரசபை உறுப்பினர் து.மதன்; மற்றும் தீயணைப்புப் பிரிவின் பொறுப்பாளர் வி.பிரதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.