உடலம் தகனம் செய்யும் முயற்சி பிரதேச இளைஞர்களின் எதிர்ப்பால் வவுனியாவிற்கு கொண்டு செல்ல ஏற்பாடு!

IMG 5625
IMG 5625

முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த கொழும்பு குணசிங்க புரத்தினை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ள நிலையில் இதில் 80 அகவையுடைய வேலு சின்னத்தம்பி என்பருக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து இருவரின் உடலங்களும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பிரேதபரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று (2)வேலு  சின்னத்தம்பி என்பவரின் உடலத்திற்கு பொறுப்பு எடுக்க யாரும் இல்லாத காரணத்தினால் மருத்துவமனை நிர்வாகம் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த நபரின் உயிரிழப்பு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முள்ளியவளை பொலீசாரால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டமைக்கு இணங்க உடலத்தினை கொரோனா சட்டத்திற்கு அமைவாக மருத்துவமனை நிர்வாகமே அடக்கம் செய்யவேண்டும் என்பதற்கு இணங்க.உயிரிழந்த வேலு சின்னத்தம்பியின் உடலம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரின் அனுமதியுடன் குமாரபுரம் பகுதி கிராம சேவகர் ஊடாக மாவடிப்புலவு மயானாத்தில எரியூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டபோது உடலம் ஊர்தியில் ஏற்றப்பட்டு பல்வேறு தாமங்களின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை வளாகத்திற்குள் சூழ்ந்து கொண்ட குமாரபுரம் இளைஞர்கள் குறித்த உடலத்தினை தமது கிராமத்தில் எரிக்கவேண்டாம் என்ற எதிர்பினை வெளிப்படுத்தியுள்ளதுடன் உடலத்தினை வேறு இடத்தில் எரியுங்கள் என்று கோரியுள்ளார்கள்.

இதற்கமைய உடலத்தினை வவுனியாவில் உள்ள மின்சார  எரிசுடலையில் எரியூட்டுவதற்கு அதனை கொண்டு செல்வதற்கு பணம் இல்லாத பிரச்சனை காணப்படுவதாக முள்ளிவளை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி இளைஞர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அதற்கான செலவினை இளைஞர்கள் சேர்த்து கொடுப்பதாக தெரிவித்துள்ளதை தொடர்ந்து முள்ளியவளை பொலீசார் குறித்த உடலத்தை  வவுனியா கொண்டு சென்று மின்சார எரியூட்டலில் எரிப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.

சுமார் மூன்று மணி நேரங்கள் உடலம் மாவட்ட மருத்துவமனை பிரேத பரிசோதனைஅறையில் இருந்து வெளியில் கொண்டு செல்ல முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும் இளைஞர்களின் எதிர்ப்பினால் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த இளைஞர்கள் பாதுகாப்பு முகக்கவசம் இன்றி  அதிகளவானவர்கள் மாவட்ட மருத்துவமனையில் ஊரடங்கு சட்டம் வேளையில் ஒன்று கூடியுள்ள நிலையிலும் இதனை பொலீசார் கண்டுகொள்ளாத நிலை காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.