நாயை சுட்டு கொன்ற முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் கைது!

05
05

நீர்கொழும்பு – பெரியமுல்லை பகுதியில் மனித உரிமை செயற்பாட்டாளரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப அங்கத்தவர் ஒன்றிய தலைவருமான பிரிட்டோ பெர்ணாந்துவின் வீட்டு நாய் இன்று சுட்டுக் கொல்லப்பட்டிருந்தது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் க்லமென்ட் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று மாலை நீர்கொழும்பு பதில் நீதிவான் பிரிமால் அமரசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்திய போது இரண்டு ஐந்து இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்வதற்கு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இவ் வழக்கு விசாரணை இம்மாதம் 18ம் திகதி வரை பதில் நீதிவானால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் 2007ம் ஆண்டு பொலிஸ் அத்தியட்சகராக இருந்த போதும் தனிப்பட்ட பகை காரணமாக நபர் ஒருவர் மீது துப்பாக்கி சூடு மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.