பாடசாலைகள் திறப்பது தொடர்பில் வெளியாகிய தகவல்

5 tjt
5 tjt

பாடசாலைகளை எப்போது திறப்பது என்பது தொடர்பாக அடுத்த வாரத்திலேயே தீர்மானிக்கப்படுமென கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மாத்தறை நகரில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீள திறக்கும் தினம் தொடர்பாக இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. அடுத்த வாரமளவில் இது தொடர்பாக தீர்மானிக்கப்படும். அதன் பின்னர் சரியான தினத்தை அறிவிப்போம்.

எப்படியும் பாடசாலைகளை திறக்க முன்னர் அங்கு தொற்று நீக்கி மருந்துகள் விசிரப்படும். பின்னர் அதிபர் ஆசிரியர்கள் அழைக்கப்படுவர்.

அதன்பின்னர் சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்கள் அழைக்கப்படுவர். இதன் பின்னர்தான் ஆரம்ப வகுப்புக்களை திறப்பது தொடர்பாக தீர்மானிக்கப்படும்.

எப்படியும் பாடசாலைகளை திறந்த பின்னர் புதிய கால அட்டவணையை தயாரிக்க வேண்டிவரலாம்.
அதிகமான மாணவர்கள் இருக்கும் வகுப்புகளில் சமூக இடைவெளியை பேணக்கூடிய வகையில் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும். என அவர் தெரிவித்துள்ளார்.