சுவிஸ் போதகரால் வந்த கொரோனா: முதல் நோயாளியைத் தவிர ஏனையோர் வீடு வந்தார்கள்

1 m 2
1 m 2

கொரோனா வைரஸ் தொற்றுடன் பொலனறுவை – வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வடக்கைச் சேர்ந்த இருவர் நேற்று வீடுகளுக்குத் திரும்பியதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 15 பேரும், வவுனியாவைச் சேர்ந்த ஒருவருமாக 16 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

வடக்கில் சுவிஸ் மத போதகருடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்களில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதில் தாவடியைச் சேர்ந்தவர் முதலாவது நோயாளியாக அடையாளம் காணப்பட்டு மார்ச் மாதம் 23ஆம் திகதி கொழும்பு தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் ஏனைய 16 பேரும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இரணவில, வெலிக்கந்தை வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் 16 பேரும் சிகிச்சை முடிவடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். முதலாவது நோயாளி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.