வீட்டுத் தோட்டங்கள் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மரக்கறிப் பயிர் விதைகள் விநியோகம்

9 mm
9 mm

சுதேச உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அரசு அறிமுகப்படுத்தியுள்ள சௌபாக்கியா 10 இலட்சம் வீட்டுத் தோட்டங்கள்  நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஏறாவூர் நகர விவசாயப் போதனாசிரியர் பிரிவில் மரக்கறிப் பயிர் விதைககள்  விநியோகிக்கப்பட்டுள்ளன.

விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன் தலைமையில் ஏறாவூர் விவசாய அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 300 குடும்பங்களுக்கு தலா 20 ரூபாய் மானிய அடிப்படையில் வெண்டி, பசளி, கீரை, பயற்றை, மிளகாய், உள்ளடங்கிய பொதி விநியோகிக்கப்பட்டன.

இவை அடுத்த ஒன்றரை மாத காலப்பகுதிக்குள் சிறந்த அறுவடையைத் தரக்கூடிய மரக்கறிப் பயிர்கள் எனவும் இவற்றைக் கொண்டு நாளாந்த சமையலுக்குப் போதுமான மரக்கறித் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும் என விவசாயப் போதனாசிரியை முர்ஷிதா ஷிரீன் விதைகளை விநியோகிக்கும் நிகழ்வில் பயனாளிகளிடம் தெரிவித்தார்.

விதைகள் விநியோக நிகழ்வில் விவசாய உதவிப் பணிப்பாளர் ஈ. சுகுந்ததாஸன்,  ஏறாவூர் நகர  சபைத் தலைவர் ஐ. அப்துல் வாஸித்,  செயலாளர் ஏ.ஆர். ஷியாவுல் ஹக்,  கமநலசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஈ. தர்ஸ்குமார், உள்ளிட்ட இன்னும் பலர் கலந்து கொண்டனர்.