ஐம்பதாயிரம் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையில் சட்டத்தரணி ஹபீப் ரிபான்

01 16
01 16

கொவிட் 19 நோயினால்; பாதிக்கபட்டு மரணிக்கின்ற முஸ்லீம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யக் கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐம்பதாயிரம் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கையினை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபான் ஆரம்பித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் கொவிட் 19 இனால் அதிகளவான மக்கள் பாதிக்கபட்டு மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் மரணித்திருக்கின்றார்கள். இவ்வாறான சூழ்நிலையில் எமது நாட்டிலும் மரணங்கள் ஏற்பட்டுள்ளதோடு மரணிக்கின்றவர்களின் உடல்கள் எரிக்கபட்டு வருகின்றன.

ஒரு மரணம் நிகழ்ந்துவிட்டால் அவரின் உடம்பிலிருந்து உயிர் பிரிக்கபட்ட பின்னர் அந்த ஜனாஸா படுகின்ற கஸ்டங்களை பற்றி அறிந்து கொண்ட நாம் ஒரு போதும் ஒரு ஜனாஸா எரிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

எமது நாட்டிலே நமது மார்க்க கடமைகளையும் அதன் தேவைகளையும் எமது நாட்டின் அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்த வேண்டிய கடமைப்பாடு எமது ஒவ்வொரு முஸ்லீமுக்கும்; இருக்கின்றது.

அதனடிப்படையில் முஸ்லீம் ஜனாஸா நல்லடக்கம் செய்யபடவேண்டியதன் முக்கியத்துவத்தினை தெளிவுபடுத்தும் நோக்கில் எமது மாவட்டத்தில் ஐம்பதாயிரம் கையெழுத்துக்களை பெற்று அரசாங்கத்திடம் வேண்டுகோள் ஒன்றினை முன்வைக்க திட்டமிட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டமானது அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் அவர்களினால் முன்னெடுக்கபட்டு  நடைமுறைபடுத்தபட்டுவருகின்றது.