அல்லைப்பிட்டி புனித பிலிப்னேரியர் தேவாலயத்தில் சுடர் ஏற்றி அஞ்சலி

FB IMG 1589809687268
FB IMG 1589809687268

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் இன படுகொலையின் நினைவு நாளான இன்றையதினம் மாலை அல்லைப்பிட்டி புனித பிலிப்னேரியர் தேவாலயத்தில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 100 ற்கும் மேற்பட்ட பொது மக்களின் நினைவாகவும், காணாமல் ஆக்கப்பட்ட ஜிம்பிராவுன் பாதிரியாரின் நினைவாகவும் குறித்த அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.

இராணுவம், பொலிஸார் குறித்த அஞ்சலி நிகழ்வினை நடத்துவதை தடுப்பதற்கு சில முயற்சிகள் மேற்கொண்டிருந்த போதும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் குறித்த அஞ்சலி நிகழ்வு நடத்தி முடிக்கப்பட்டது.

கொரோனா இடர் காலத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு வார நிகழ்வுகளை நடத்திய தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரை தனிமைப்படுத்துமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இருப்பினும் இன்று மீளாய்வு மனுவினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தாக்கல் செய்திருந்தார்.

குறித்த வழக்கு விசாரணையின் போது மேற்படி உத்தரவு மீளப்பெறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மாலை அல்லைப்பிட்டி படுகொலையை நினைவு கூறும் வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் மேற்படி அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.